நடப்பு வாரத்தில் தொடர்ந்து சரிவினையே கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஏற்றம் கண்டு வருகிறது.
இந்த நிலையில் தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 129.66 புள்ளிகள் ஏற்றம் கண்டு 43,729.62 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 38.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 12,810 ஆகவும் காணப்பட்டது. இதில் அனைத்து துறை குறியீடுகளும் சற்று பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது.

இது இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு விகிதம் மோசமான சரிவினைக் காணும் என்று கணித்து வந்த நிலையில், தற்போது அதனை மாற்றியமைக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக எஸ்பிஐ இரண்டாவது காலாண்டில் ஜிடிபி விகிதம் - 12.5 சதவீதத்தில் இருந்து -10.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளதையே காட்டுகிறது. அதுமட்டும் அல்ல இரண்டாவது காலாண்டில் சற்று சரிவில் காணப்பட்டாலும், மூன்றாவது காலாண்டில் அதனை விட சிற்ப்பாக வளர்ச்சி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆக இது சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்தும், கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகளும், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்கள் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளன.
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள டைட்டன், பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில், ஹெச்டிஎஃப்சி. எண்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், கோல் இந்தியா, யுபிஎல், அதானி போர்ட்ஸ், இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் டைட்டன், பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில், ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 198 புள்ளிகள் அதிகரித்து 43,792.93 ஆகவும், இதே நிஃப்டி 53.40 புள்ளிகள் அதிகரித்து 12,825.10 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74.14 ரூபாயாக சற்றே அதிகரித்து காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications