சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கான அறிகுறிகள் மிகவும் பிரகசமாக இருக்கும் காரணத்தால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நுகர்வோர் மற்றும் மொத்த விலை பணவீக்கம் ஆகியவை இந்திய சந்தை முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை இழந்தது. இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப பெற்றனர்.

இதன் காரணமாக இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவிலேயே இருந்தது. வர்த்தக முடியும் தருவாயில் சில புள்ளிகள் உயர்ந்த உடனேயே சரிந்து 91.69 புள்ளிகள் இழந்து சென்செக்ஸ் குறியீடு 32,941.87 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் சரிலேயே முடிந்தது. இன்றைய வர்த்தகம் முடியும்போது நிஃப்டி 38.35 புள்ளிகள் சரிந்து 10,186.60 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications