கடந்த வாரத்தில் இருந்தே சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்றோடு இரண்டாவது நாளாக சற்று சரிவினைக் கண்டுள்ளது.
இன்றும் ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 122.47 புள்ளிகள் சரிந்து, 44,057.58 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 99.80 புள்ளிகள் சரிந்து 12,838.50 ஆகவும் இருந்தது.
இதே தொடக்கத்தில் சென்செக்ஸ் 284.74 புள்ளிகள் சரிந்து 43,895.31 ஆகவும், நிஃப்டி 76.20 புள்ளிகள் குறைந்து, 12,862 ஆகவும் காணப்பட்டது. இதில் 483 பங்குகள் ஏற்றத்திலும், 642 பங்குகள் சரிவிலும், 77 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
டாலர் Vs ரூபாய்
இதே அமெரிக்கா டாலரின் முக்கிய சப்போர்ட் ஆனது 74 ரூபாயாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே கடந்த அமர்வில் இந்திய ரூபாயின் மதிப்பானது 74.23 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் நவம்பர் மாத கான்ட்ராக்டில் ரூபாயின் மதிப்பில் ஓபன் இன்ட்ரஸ்ட் 4.9% அதிகரித்தும் காணப்படுகிறது.
தொடர்ந்து அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு
இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்கள் சந்தைக்கு சாதகமாக இருந்தாலும் சந்தை புராபிட் புக்கிங் காரணமாக சற்று சரிவில் காணப்படுகிறது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் அன்னிய முதலீடுகள் வரத்து இதுவரையில் 41,209.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால் அக்டோபர் மாதத்தில் 14,537.40 கோடி ரூபாய் முதலீடுகள் மட்டும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு முதலீடு சரிவு
அன்னிய முதலீடுகளின் வரத்து அதிகரித்திருந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு குறைந்துள்ளது. சொல்லப்போனால் நவம்பர் 18 நிலவரப்படி 26,920.08 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன. ஆனால் அக்டோபர் மாதத்தில் 17,318.44 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியது கவனிக்கதக்கது. இது சந்தை புதிய உச்சத்தினை தொட்ட நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் செய்துள்ளதால் வந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
லட்சுமி விலாஸ் வங்கி
தமிழகத்தினை அடிப்படையாகக் கொண்ட லட்சுமி விலாஸ் வங்கிக்கு, மத்திய நிதியமைச்சகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், இவ்வங்கி வாடிக்கையாளர் அவசர தேவை தவிர, 25,000 ரூபாய்க்கு மேல் பணத்தினை எடுக்க முடியாது. பெரியளவிலான பரிவர்த்தனைகளை செய்ய முடியாது என்று அறிவித்தது. இதன் காராணமாக நேற்றே இவ்வங்கி லோவர் சர்கியூட் ஆகியது. அப்போது 20% குறைந்து 12.40 ரூபாயாக காணப்பட்டது. ஆக இதுவும் சந்தையின் சரிவுக்கு ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்றும் இவ்வங்கி
பங்கின் விலையானது அப்படியே தான் உள்ளது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில் பல சிவப்பு நிறத்திலும், பல மாற்றமில்லாமலும் காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் பின்செர்வ், டாடா ஸ்டீல், எம்&எம், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே கோல் இந்தியா, யுபிஎல், பவர் கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் பஜாஜ் பின்செர்வ், டாடா ஸ்டீல், எம் & எம், , பஜாஜ் பைனான்ஸ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே கோல் இந்தியா, யுபிஎல், பவர் கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 32 புள்ளிகள் குறைந்து, 44,147 ஆகவும், இதே நிஃப்டி 1.55 புள்ளிகள் குறைந்து, 12,936.75 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74.28 ரூபாயாக சரிந்து காணப்படுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications