ஜனவரி மாதத்தில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தங்களது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. தற்போது நாட்டின் வர்த்தகச் சூழ்நிலைகள் சரியாக இல்லாத நிலையில், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் மந்தமாக இருக்கும் எனக் கணித்துள்ள முதலீட்டாளர்கள் கடந்த 2 இரண்டு நாட்களாகக் குறைவான அளவிலேயே முதலீடு செய்து வருகின்றனர்.

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் லாபகரமான நிலையிலேயே துவங்கினாலும், 10.45 மணிக்கு மேல் சரிவைடைய துவங்கியது. மேலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சென்செக்ஸ் கணிசமாக உயர்ந்தாலும், தொடர்ந்து நிலைபெற முடியாமல் மீண்டும் சரிந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 10.12 புள்ளிகள் சரிந்து 34,433.07 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 10,632.20 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ், விப்ரோ, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க் ஆகியவை லாப நிலையில் முடிந்தது. பிற நிறுவனங்கள் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications