மும்பை: இந்திய பங்கு சந்தைகள் இன்று ரிசர்வ் வங்கியின் ரெபோ ரேட் 35 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சரிவில் இருந்த சென்செக்ஸ் மெல்ல மீண்டு உயர ஆரம்பித்தது.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் ஒரு மணி நிலவரப்படி 37,010.50 ஆக இருந்தது. தேசிய பங்கு சந்தை நிஃப்டி 3 புள்ளிகள் அதிகரித்து 10,951 ஆக இருந்தது.

எனினும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்றே ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 70.94 ரூபாயாக வீழ்ச்சியடைந்து காணப்பட்ட நிலையில், தற்போது 70.65 ரூபாயாக சற்றே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. 5.75 சதவிகிதமாக இருந்த விகிதம், இனி 5.4 சதவிகிதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க இது பெரிதும் உதவும் என்றும், இதனால் வட்டி விகிதம் கட்டாயம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வட்டி விகித குறைப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே மூன்றும் முறை வட்டியை குறைந்துள்ள ரிசர்வ் வங்கி இந்த முறையும், இதை செயல்படுத்துமா? வட்டி குறைப்பு இருக்குமா என்ற சந்தேகமும் நிலவி வந்த நிலையில், தற்போது வட்டி குறைப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் விரைவில் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் போது, வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜூ எண்டர்டெய்ன்ட்மென்ட், யெஸ் பேங்க், சிப்லா, ஹீரோ மோட்டோ கார்ப், உள்ளிட்ட பங்குகள் டாப் கெய்னராகவும், இதுவே இந்தியா புல்ஸ், டைட்டன் யெஸ் பேங்க், யுபிஎல், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் உள்ளிட்ட டாப் லூசர்களாக இருந்தன.
இதுவே சென்செக்ஸ் குறியீட்டில் பார்தி ஏர்டெல், டி.சிஎஸ், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி டாப் கெயினராகவும், இதுவே யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், கோடாக் மகேந்திரா, டாப் லூசர்களாக காணப்பட்டன.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications