மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. இன்போசிஸ் கலக்கல்..!
செப்டம்பர் காலாண்டின் ஜிடிபி உயர்வு, இந்திய பங்குச் சந்தையை பெரிய அளவில் பாதித்துள்ளது என்ற சொல்ல வேண்டும். இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் மிகவும் குறைந்த அளவிலான முதலீடு மட்டுமே குவிந்தது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 36.78 புள்ளிகள் உயர்ந்து 32,869.72 புள்ளிகளை அடைந்தது.

அதேபோல் நிஃப்டி குறியீடு வெறும் 5.95 புள்ளிகள் உயர்ந்து 10,127.75 புள்ளிகளை அடைந்தது.
இன்போசிஸ் நிறுவனத்தில் புதிய சிஇஓவாக சலில் பாரிக் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 3.5 சதவீதம் வரையில் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications