கணிசமான சரிவுடன் தப்பித்த மும்பை பங்குச்சந்தை..!
கடந்த இரண்டு வர்த்தக நாட்களாகப் பல்வேறு காரணங்களுக்காக மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை கண்டது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலா நஷ்டத்தை அடைந்தனர்.
இந்நிலையில் இன்றைய வர்த்தகமும் அதிகளவிலான சரிவை எதிர்பார்த்த நிலையில் வங்கிகள் மீதான முதலீடு அதிகரித்துச் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 26.87 புள்ளிகள் மட்டுமே சரிந்து 31,599.76 புள்ளிகளை அடைந்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 1.10 புள்ளி சரிந்து 9,871.50 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications