வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. !

டெல்லி: இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இரண்டாவது வாரமாக ஏற்றம் கண்ட பிறகு, கடந்த வெள்ளிக்கிழமையன்று சற்றே குறைந்து முடிவடைந்தது.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1% சரிவடைந்திருந்தது.

நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி பேங்க் கடந்த வாரத்தில் முறையே 1% மற்றும் 2% முறையே குறைந்தது. நிஃப்டி ஐடி, மெட்டல்ஸ், ஆட்டோ பங்குகள் உள்ளிட்ட பங்குகள் முதலிடம் பிடித்தன. நிஃப்டி மெட்டல்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை 3%க்கும் அதிகமாக சரிந்தது.

வரும் வாரத்தில் வெளியாகும் முடிவுகள்

வரும் வாரத்தில் வெளியாகும் முடிவுகள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், இந்தியன் ஆயில் கார்ப், ஹெவல்ஸ், ஹிண்டால்கோ மற்றும் ஃபெடரல் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களும், வங்கிகளும், இந்த வாரத்தில் காலாண்டு முடிவுகள் வெளியாகிவுள்ளன.

ஸ்ரீ சிமெண்ட், பாஸ்க், கோல்கட், பாமோலிவ், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், கனரா வங்கி, ஜிஎஸ்கே பார்மா, உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி ஆகியவை தங்கள் நிதி நிறுவனத்தின் முடிவுகளை அறிவிக்க உள்ளன.

 

கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எண்ணிக்கையானது சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக குறையத் தொடங்கியுள்ளது. அதேபோல கடந்த ஆறு நாட்களில் ஐந்து நாட்களில் தினசரி பாதிப்பில் இருந்து, மீண்டு வரும் வழக்குகள் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளது. ஆக பாதிப்பு எண்ணிக்கையானது குறையத் தொடங்கியது சந்தைக்கு சற்று, ஆதரவாக செயல்படக்கூடும்.

மேலும் தற்போது தடுப்பூசி போடப்பட்டும் வரும் நிலையில், அதுவும் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

நுகர்வோர் விலை குறியீடு (WPI)

நுகர்வோர் விலை குறியீடு (WPI)

அதோடு நுகர்வோர் விலை குறியீடு (WPI) குறித்த இந்த தரவு திங்கட்கிழமையன்று வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் 8 வருட உச்சத்தினை எட்டியது. இதே கடந்த வாரத்தில் தொழில்துறை உற்பத்தி குறித்தான குறியீடு மார்ச் மாதத்தில் 22.4% ஆக அதிகரித்தது. இதே சில்லறை பணவீக்க மூன்று மாத குறைந்த நிலையை 4.29% ஆக எட்டியது.

அன்னிய நேரடி முதலீட்டாளர்கள்

அன்னிய நேரடி முதலீட்டாளர்கள்

அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை காரணமாக, முதலீட்டாளர்களின் உணர்வை இது பாதிக்கலாம். ஏற்கனவே முதலீடுகள் வெளியேறிய நிலையில், மே 1 -14 தேதிகளில் 6,427 கோடி ரூபாயையும், கடன் பிரிவில் இருந்து 25 கோடி ரூபாயையும் வெளியேற்றினர். எனினும் தொடர்ந்து குறையும் கொரோனா வழக்குகளால், இனி வரும் வாரத்தில் எதிரொலிக்கலாம்.

டெக்னிக்கல் படி

டெக்னிக்கல் படி

ஏஞ்சல் புரோக்கின் சமீத் சவான், வாரத்தின் முதல் பாதியில் சில முக்கிய நிலைகளைக் குறிப்பிடுவதும் அதை உன்னிப்பாகக் கண்காணிப்பதும், புத்திசாலித்தனமாக இருக்கும். இந்த நிலையில் சப்போர்ட் லெவல் 14,540 - 14,400 லெவலாக இருக்கும். இதே மேலே 14,750 - 14,830 ஆக இருக்கும். இது தவிர சர்வதேச நிலவரம், அமெரிக்க பத்திர லாபம், ரூபாய் மற்றும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவையும் சந்தையில் எதிரொலிக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+