தொடர்ச்சியாக இந்த வாரம் தொடக்கம் முதற்கொண்டே இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.
இந்த நிலையில் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மூன்றாவது நாளான இன்று, சர்வதேச சந்தைகளின் எதிரொலியாக தொடக்கம் முதற்கொண்டே ஏற்றம் கண்டு வருகின்றது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 173.17 புள்ளிகள் அதிகரித்து, 43,450 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 55.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 12,686 ஆகவும் ஏற்றத்தில் தொடங்கியது.
இதற்கிடையில் 701 பங்குகள் ஏற்றத்திலும், இதே 301 பங்குகள் சரிவிலும், இதே 39 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இந்தியாவுடன் பேச்சு வார்த்தை
அமெரிக்காவின் மருந்து நிறுவனமான பிப்சர் தற்போது இந்திய அரசுடன், கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. லைவ்மிண்டுக்கு பிப்சர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில். இந்தியாவுடனான ஆரம்பகால பேச்சுவார்த்தை சாத்தியம் இருப்பதாக நம்புவதாக தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை
ஆக இந்தியாவுடன் எங்களது தடுப்பூசியை பயன்படுத்த நாங்கள் எங்களது உரையாடலை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் கூறுவதை போல் தடுப்பூசியானது விரைவில் செயல்பாட்டு வந்துவிட்டால், பொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்து விடும். தேவையும் விரைவில் மீண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நிறுவனங்களின் செயல்பாடுகள் மீண்டும் வழக்கம் போல் செயல்பட ஆரம்பித்து விடும். இது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற உணர்வும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பச்சை நிறத்தில் குறியீடுகள்
முதலீட்டாளர்களின் இந்த நம்பிக்கையினால், நிஃப்டி சென்செக்ஸ் குரியீட்டில் உள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப் குட்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்றவை 1% கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றன. எனினும் பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ் மட்டும் சற்று சரிந்து காணப்படுகிறது.
அன்னிய முதலீடுகள் வரத்து அதிகரிப்பு
இதற்கிடையில் நடப்பு மாதம் தொடக்கம் முதற்கொண்டே அன்னிய முதலீடுகளின் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது இந்திய சந்தைகளுக்கு சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள கெயில், எம்&எம், ஹீரோ மோட்டோகார்ப், கோடக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, பிரிட்டானியா, ஹெச் யு எல், டைட்டன் நிறுவனம், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது சந்தை நிலவரம் என்ன?
இதே சென்செக்ஸ் குறியீட்டில் எம்&எம், கோடக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஒஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்யுஎல், டைட்டன் நிறுவனம், பவர் கிரிட் கார்ப், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.


Click it and Unblock the Notifications