மும்பை : இன்று காலை சற்று ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது வரை ஏற்றத்திலேயே உள்ளன.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 105 புள்ளிகள் ஏற்றம் கண்டு 36,805 ஆக உள்ளது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 31 புள்ளிகள் அதிகரித்து 10,894 ஆக உள்ளது.
முந்தைய நாள் வர்த்தகத்தில் கடந்த ரூபாயின் மதிப்பு படு வீழ்ச்சி கண்டதையடுத்து, இன்று 70.66 ரூபாயாக அதிக மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது.

இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீரில் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் நிலவி வந்த பதற்றமான சூழலில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவுகள் 35A, 370 ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததோடு, மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதுவும் ஒரு காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிய காரணமாக இது அமைந்தது.
இந்த நிலையில் பல எதிர்ப்புகள் இருந்தாலும் இதற்கான சட்டபிரிவுகளை ரத்து செய்தது மத்திய அரசு.
சர்வதேச அளவில் முதல் இரண்டு பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனா இடையே மீண்டும் வர்த்தக போர் ஆரம்பிக்கும் நிலை நிலவி வருவதையடுத்து, அமெரிக்கா மீண்டும் சீனாவின் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 10 சதவிகித வரியை அதிகரிக்க போவதாக கூறியுள்ளது.
எனினும் இந்த இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை இருந்தாலும், இந்தியாவுக்கு சில ஆதாயமான அறிவிப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு இது சாதமாக இருக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
மேலும் சர்வதேச சந்தைகள் வீழ்ச்சியுடனே காணப்பட்டாலும், இந்திய பங்கு சந்தை அதிகப்படியான ஏற்றம் காண விட்டாலும், முந்தைய செசனை போல அல்லாமல் சற்று ஏற்றத்துடனே உள்ளது.
மேலும் பாதிக்கு மேற்பட்ட துறை வாரியான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக மெட்டல், ஆட்டோமொபைல், வங்கி பங்குகள் என அனைத்து ஏற்றத்திலேயே உள்ளன.
இதில் நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தியா புல்ஸ், கோல் இந்தியா, டெக் மகேந்திரா, டாக்டர் டெட்டீஸ் லெபாரட்டீஸ் உள்ளட்ட பங்குகள் டாப் கெய்னராக உள்ளன. இதுவே ஜூ எண்டர்டெயின்மென்ட், சிப்லா, பவர் கிரிட் கார்ப், விப்ரோ, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதுவே சென்செக்ஸ் குறியீட்டில் கோல் இந்தியா, இண்டஸ்இந்த் பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ், யெஸ் பேங்க், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதுவே பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஓ.என்.ஜி.சி, வேதாந்தா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications