இந்திய சந்தை முடியும் போது பங்குகள் விற்பனை அதிகரித்ததால் திங்கட்கிழமை சரிவுடன் முடிந்தது, சென்செக்ஸ் 218 புள்ளிகள் சரிந்தது மட்டும் இல்லாமல் நிப்டி 10,937 புள்ளிகளாகவும் சரிந்தது.
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 217.86 புள்ளிகள் என 0.60 சதவீதம் சரிந்து 36,323.77 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 82.05 புள்ளிகள் என 0.74 சதவீதமாக 10,936.85 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் பார்மா, மெட்டல், ஆட்டோ, பொதுத் துறை வங்கி நிறுவனப் பங்குகள் கடைசி நிமிட விற்பனையில் சிக்கி 1 முதல் 4 சதவீதம் வரை சரிந்தது.
லாபம் அளித்த பங்குகள்
என்டிபிசி, இன்போசிஸ், எச்டிஎப்சி, விப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர், யெஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் லாபத்தினை அளித்து இருந்தன.
நட்டம் அளித்த பங்குகள்
டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ் நிறுவன பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
மொத்த விலை குறியீட்டுப் பணவீக்கம் உயர்வு
உணவுப் பொருட்கள், எண்ணெய் விலை போன்றவற்றால் மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 4.5 வருடம் இல்லாத அளவிற்கு உயர்ந்து மே மாதம் 4.43 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 5.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்த விலை குறியீடு 0.90 சதவீதமாக இருந்தது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications