கச்சா எண்ணெய் சந்தையில் பிரென்ட் க்ரூட் ஆயில் பேரலுக்குச் சுமார் 80 டாலரை தொடும் நிலையில், எண்ணெய் தேவைக்காக வெளிநாடுகளை நம்பியிருக்கும் நாடுகள் அனைத்தும் தற்போது மிகப்பெரிய நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்க உள்ளது. இதன் எதிரொலி பங்குச்சந்தையிலும் அதிகளவில் தெரிகிறது.
மேலும் கர்நாடகாவில் பிஜேபி கட்சி சார்பில் இன்று எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றாலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் ஆட்சி கவிழும் நிலையில் உள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் இன்று முதலீட்டு அளவை குறைத்தனர்.

இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 238.76 புள்ளிகள் சரிந்து 35,149.12 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 58.40 புள்ளிகள் சரிந்து 10,682.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், ஐடிசி ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்தது. இதேபோல் கோல் இந்தியா 2.53 சதவீதம் வரையில் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications