ஜூன் மாத இறுதியில் தொடர் சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச்சந்தை, கடந்த வாரம் ஜூலை மாதத்திற்கான ஆர்டர்கள் துவங்கிய போது மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு மீண்டது.
இந்நிலையில் ஆசிய சந்தையில் நிலவிய மந்தமான வர்த்தகச் சூழ்நிலையால் இன்று காலையில் சென்செக்ஸ் அதிகளவிலான சரிவை உண்டாக்கியது.
வர்த்தகப் பிரச்சனை
அமெரிக்க அரசின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆசிய சந்தையை மட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தையையும் தாக்கியுள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் ஆசிய, ஐரோப்பிய சந்தை அதிகளவிலான பாதிப்பை ஏற்பட்டது.
ஹார்லி டேவிட்சன்
டிரம்ப் அரசின் வர்த்தகக் கட்டுப்பாட்டின் காரணமாக ஐரோப்பிய சந்தையை விட்டு விடக் கூடாது என்பதற்காக ஹார்லி டேவிட்சன் அமெரிக்காவை அடுத்த ஐரோப்பாவில் உற்பத்தி தளத்தை அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடர்ந்து.
இதனை எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்லி இதற்காக வருந்தப்போகிறது என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவை விட்டு வெளியேறும் பிற நிறுவனங்களும் அச்சத்தில் உள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இதன் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 300 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 100 புள்ளிகள் சரிந்து 10,614 புள்ளிகள் வரையில் சரிந்துஔள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் என்டிபசி, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்து, இது 1.30 மணி நிலவரம்.


Click it and Unblock the Notifications