ஈரான் மீதான தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு காரணமாக, இந்திய பங்கு சந்தை திங்கள்கிழமை வர்த்தகம் திறப்பதற்கு முன்பு கடுமையான சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் சுமார் 6,000 புள்ளிகள் வரை சரிந்த நிலையில், நிஃப்டி 900 புள்ளிகள் சரிந்து 24,300 கீழ் தள்ளப்பட்டது.
ஆனால் வர்த்தகம் துவங்கிய பின்பு சென்செக்ஸ், நிஃப்டி இரண்டுமே பெரிய அளவுக்கு மீண்டு சரிவை கட்டுப்படுத்தியது. 9.35 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 681.96 புள்ளிகள் சரிந்து 80,602 புள்ளிகளில் வர்த்தகமாகிறது, இதேபோல் நிஃப்டி குறியீடு 210.45 புள்ளிகள் சரிந்து 24,925 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

இதேபோல் 10 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 9992.61 புள்ளிகள் சரிந்து 80,294.58 புள்ளிகளில் வர்த்தகமாகிறது, நிஃப்டி குறியீடு 310 புள்ளிகள் சரிந்து 24,861 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இன்றைய வர்த்தகம் முழுக்க முழுக்க சர்வதேச சந்தையின் தாக்கம் மூலம் ஏற்படும் மாற்றங்களையே பிரதிபலிக்கிறது. பெரும் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் இன்றைய வர்த்தகத்தில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா - இஸ்ரேல் எடுத்துள்ள நிலைப்பாட்டின் எதிரொலியாக முதலீட்டை மறுசீரமைப்பு செய்யும் பணியில் இறங்கியுள்ளது. இதனால் இன்று காலை வர்த்தகத்தில் பெரும் சரிவுடன் துவங்கியது.
ரூபாய் மதிப்பில் சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 0.3% சரிந்து 91.25 என்ற அளவில் திறந்தது. முந்தைய வர்த்தக நாள் முடிவு 90.9750 ஆக இருந்த நிலையில், ரூபாய் ஒரு மாதத்தில் முதன்முறையாக 91-ஐ கடந்துள்ளது. உலகளாவிய பதற்றத்திற்கு மத்தியில் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்ததும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு உயரும் என்ற அச்சமும் ரூபாயை பலவீனப்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் 12% ஏற்றம்
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த தாக்குதலுக்கு பதிலாக ஈரான் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால், ஹோர்முஸ் பாதையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் விளைவாக பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு கட்டத்தில் பேரலுக்கு 82.37 டாலர் வரை உயர்ந்தது. இது 2025 ஜனவரிக்குப் பிறகு காணப்பட்ட உயர்ந்த நிலை. பின்னர் அது 78.24 டாலர் அளவில் வர்த்தகமானது.
அதே நேரத்தில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 75.33 டாலர் வரை சென்ற பின்னர் 71.68 டாலர் அளவில் இருந்தது. எண்ணெய் விலை 100 டாலர் வரை செல்வதற்கான சாத்தியம் இருப்பதாக சர்வதேச சந்தை கணிப்புகள் கூறுகின்றன.
இந்திய சந்தைக்கு இரட்டை பாதிப்பு
இந்திய சந்தை ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு (AI) மாற்றங்களால் ஐடி துறையில் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வரும் வேளையில். கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம், நாணய பலவீனம் ஆகியவை சந்தைக்கு கூடுதல் பாதிப்பாக உள்ளன.
கச்சா எண்ணெய் இறக்குமதியில் அதிகம் சார்ந்துள்ள இந்தியாவுக்கு, இதன் விலை உயர்வு நேரடியாக வர்த்தக பற்றாக்குறையை (trade deficit) அதிகரிக்கும். இது வங்கிக் கொள்கை, வட்டி விகிதம், அரசின் நிதிச்சுமை ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அடுத்த கட்டம் என்ன?
உலக அரசியல் பதற்றம் குறைந்து, ஹோர்முஸ் வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து சீராகும் வேளையில் தான் பங்குச்சந்தையின் அடுத்தக்கட்ட நகர்வு அமையும். முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளான தங்கம், அமெரிக்க டாலர் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். உலக அரசியல், எண்ணெய் விலை, ரூபாய் நிலை ஆகிய மூன்று காரணிகளும் அடுத்த சில வாரங்களில் இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தையின் திசையை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய அம்சங்களாக உள்ளன.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications