அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை குறைந்திருந்தாலும், இன்னும் முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமாகவே உள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் இன்று மாறுபட்ட வர்த்தக நிலையே நிலவியது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள்
இன்று உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களின் அதீத முதலீடுகளாலும், ரூபாய் மதிப்புக் கணிசமாக உயர்ந்த காரணத்தாலும் இன்று மும்பை பங்குச்சந்தை காலை முதல் உயர்வுடன் காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 318.20 புள்ளிகள் உயர்ந்து 34,663.11 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 83.50 புள்ளிகள் உயர்ந்து 10,513.85 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல், இன்போசிஸ், டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.
வேதாந்தா
தேசிய பங்குச்சந்தையில் இருக்கும் வேதாந்தா இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது 4 சதவீதம் வரையில் சரிந்த இந்நிறுவனப் பங்குகள் வர்த்தக முடிவில் 0.65 சதவீதம் வரையில் மட்டுமே சரிந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications