தட்டித் தூக்கும் சென்செக்ஸ்..! இரண்டாவது நாளாக தொடரும் ஏற்றம்..!

மும்பை: கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20, 2019) அன்று காலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகளை அதிகபட்சம் 25.17 சதவிகிதமாக குறைத்தார். "பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய.." என மெர்சல் விஜய் போல சென்செக்ஸில் சந்தை தீ பற்றி எரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1921 புள்ளிகள் அதிகரித்து ஒரே நாளில் சென்செக்ஸ் 38,014 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது.

வெள்ளிக்கிழமை காலை 36,214 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி மாலை வர்த்தக நேர முடிவில் 38,014 புள்ளிகளுக்கு நிறைவு அடைந்தது, இன்றும் அதே போல ஒரு வான வேடிக்கை நடக்கும் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று காலை சென்செக்ஸ் 38,844 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியான 38,014 புள்ளிகளில் இருந்து நேரடியாக 830 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இப்போது வரை சந்தை சுமாராக 1,000 புள்ளிகள் ஏற்றம் கண்டு 39,014 புள்ளிகள் தொட்டு மேல் நோக்கி வர்த்தகமாகி வருகிறது.

தட்டித் தூக்கும் சென்செக்ஸ்..! இரண்டாவது நாளாக தொடரும் ஏற்றம்..!

சென்செக்ஸ் கடந்த 20 மே 2019 தொடங்கி 19 ஜூலை 2019 வரை தான் அதிக காலம் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி இருக்கிறது. அதன் பிறகு தொடர்ந்து 39,000 என்பது மிகப் பெரிய ரெசிஸ்டென்ஸ் புள்ளியாகத் தான் இருந்து இருக்கிறது. ஆனால் நிதி அமைச்சரின் அறிவிப்பால், இரண்டே வர்த்தக நாளில் 36,214 புள்ளிகளில் இருந்து 36400, 37000, 37410, 37750, 38000, 38450, 38800, 39000 என பல ரெசிஸ்டென்ஸ்களை தொடர்ந்து உடைத்து இருக்கிறது.

இத்தனை நாள் நல்ல மொமெண்டம் இருக்கக் கூடிய செய்திக்காக காத்திருந்தது சந்தை. இப்போது கார்ப்பரேட் வரி குறைப்பு என்கிற ஒரே கல்லில், இந்திய நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிப்பு, இந்தியாவில் முதலீடு வரத்தை அதிகரிப்பது என பல மாங்காய்களை அடித்து இருக்கிறது அரசு. எனவே சந்தை எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஒரு வேளை இந்த கார்ப்பரேட் வரி குறைப்பை வைத்தே 40,000 புள்ளிகளைக் கூட சென்செக்ஸ் அடுத்த சில வாரங்களில் கடந்தாலும் கடந்து விடும் எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் அனலிஸ்டுகள்.

சென்செக்ஸ் போல நிஃபிடியும் 325 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,599 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டியும் சுமாராக 270 புள்ளிகள் கேப் அப்பில் தான் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+