14 வருடங்களுக்கு பின் இந்தியாவின் பத்திர தரத்தை மூடி அமைப்பு உயர்த்தியது இந்திய முதலீட்டு சந்தைக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என நம்பப்பட்ட நிலையில், எஸ் அண்ட் பி இந்திய சந்தையை ஆய்வு செய்து பத்திர தரத்தை பழைய தர மதிப்பினா BBB- என்பதை மீண்டும் அறிவித்துள்ளது. இதேபோல் பொளுதார வளர்ச்சி கண்ணோட்டத்தில் Stable என்ற அளவீட்டையும் கொடுத்துள்ளது.
மூடி அமைப்பின் அறிக்கையை நம்பியவர்களுக்கு எஸ் அண்ட் பி அறிவிப்புகள் அதிர்ச்சியை அளித்தது. இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகம் மட்டுமே நிலவியது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக துவக்கம் முதல் மந்தமான வர்த்தகத்திலேயே பயணித்த மும்பை பங்குச்சந்தை ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் கணிசமான உயர்வை சந்தித்தது.
ஐரோப்பிய சந்தை
ஐரோப்பிய சந்தை துவங்கிய பின்பு, இந்திய பங்குச்சந்தையில் பங்கு வர்த்தகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் காலை முதல் சரிவிலேயே இருந்த சென்செக்ஸ் குறியீடு 2.30 மணிக்கு மேல் லாபகரமான நிலைக்கு உயர்ந்தது.
கச்சா எண்ணெய்
சவுதி மற்றும் பிற வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் குறைப்பின் மூலம் சர்வதேச சந்தையில் இதன் தேவையும் விநியோக அளவும் நேர்கோட்டில் உள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை இன்று கணிசமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய மந்தமான வர்த்தகத்தில் இதுவும் முக்கிய காரணம்.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு வெறும் 45.20 புள்ளிகள் உயர்ந்து 33,724.44 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் கணிசமான வர்த்தக உயர்வை மட்டும் பதிவு செய்து நிஃப்டி குறியீடு, இன்றைய வர்த்தக முடிவில் 9.85 புள்ளிகள் உயர்ந்து 10,399.55 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் கணிசமான அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications