செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் பல வாரங்களுக்கு பின்பு சென்செக்ஸ் 60000 புள்ளிகளை தொட்டு முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 311.21 புள்ளிகள் உயர்ந்து 60,157.72 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 98.25 புள்ளிகள் உயர்ந்து 17,722.30 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐடி நிறுவன பங்குகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்துள்ளது, ஏப்ரல் 12 ஆம் தேதி டிசிஎஸ் தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள காரணத்தால் இன்று டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா, விப்ரோ ஆகிய டாப் 5 நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது.

திங்கட்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் விலை அமெரிக்க சந்தை உயர்வுடன் முடிந்தது. இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதும் ஆசிய சந்தைகள் உயர்வுடன் துவங்கி கிட்டதட்ட 1 சதவீத உயர்வுடன் வந்தம் முடிவடைந்துள்ளது. இந்த வாரம் அமெரிக்க சந்தையின் பணவீக்க தரவுகள் வெளியாகும் காரணத்தால் திங்கட்கிழமை அமெரிக்க சந்தை சரிவை சந்திக்காமல் மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்தது மட்டும் அல்லாமல் தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது.
பணிவீக்க தரவுகள் அடிப்படையில் தான் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையில் வட்டி விகித உயர்வின் அளவுகளை முடிவு செய்யும் என்பதால் இன்று தங்கம் விலை அதிகரித்தது. இதேவேளையில் இன்று டாலர் இன்டெக்ஸ் 0.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் வட்டி விகித உயர்வுக்கு வழிவகுத்த நிலையில், தற்போது முதலீட்டாளர்கள் பணவீக்க தரவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

இந்திய பங்குச்சந்தை கடந்த 7 நாட்களாக தொடர்ந்து உயர்வுடன் இருந் நிலையில் மார்ச் 28 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு 251.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் 264.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதன் மூலம் கடந்த 7 நாட்களில் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு 12.6 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications