மும்பை பங்குச்சந்தை கடந்த 15 நாட்களில் பெரும்பாலான வர்த்தக நாளில் சரிவில் இருந்த நிலையில், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செகஸ் 1000 புள்ளிகள் வரையில் உயர்ந்து பங்குசந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் 4 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்தது.
இன்றைய வர்த்தக உயர்வுக்கு 6 முக்கியமான காரணங்கள் உள்ளதாக சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இது என்ன தெரியுமா..?
சென்செக்ஸ்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 899.62 புள்ளிகள் உயர்ந்து 59,808.97 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 59,967.04 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ்.
சென்செக்ஸ் குறியீடின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்லே, அல்ட்ரா டெக், டெக் மஹிந்திரா ஆகியவை மட்டுமே சரிவில் உள்ளது, அதுவும் 1 சதவீதத்திற்கு கீழ்.
நிஃப்டி
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு 272.45 புள்ளிகள் உயர்ந்து 17,594.35 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 17,644 புள்ளிகளை எட்டியது நிஃப்டி.
இன்றைய வர்த்தக உயர்வுக்கு 6 முக்கியமான காரணங்களை இப்போது பார்ப்போம்.
அமெரிக்க மத்திய வங்கி
ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் தற்போது அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவுகளை சார்ந்து இருக்கும் வேளையில் அட்லான்டா பெடரல் ரிசர்வ் தலைவர் Raphael Bostic, அமெரிக்க மத்திய வங்கி 0.25 சதவீத வட்டியை உயர்த்தும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதம் வரையில் உயர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
சர்வதேச சந்தை
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் 1 சதவீதம் உயர்ந்தது மூலம் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் ஜப்பான் உயர்வுடன் துவங்கியது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஆசிய சந்தையும் இன்று உயர்வுடன் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
பத்திர முதலீடுகள்
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்புகள் பெரும் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் நிலையில் பத்திர முதலீடுகளின் லாப அளவுகள் கணிசமாக குறைந்துள்ளது. அமெரிக்காவின் 10 வருட பத்திர முதலீட்டின் லாபம் 0.76 சதவீதம் குறைவாக வர்த்தகமாகியுள்ளது, இதேபோல் 2 வருட பத்திர வர்த்தகம் -0.4 சதவீதத்தில் வர்த்தகமாகிறது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாத உயர்வை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 0.32 சதவீதம் உயர்ந்து 82.33 ஆக உள்ளது.
அதானி பங்குகள்
அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களில் 21 கோடி பங்குகளை அமெரிக்காவில் முதலீட்ட அலோசனை வழங்கும் GQG Partners Inc நிறுவனம் சுமார் 15,446 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் இன்று அனைத்து அதானி குழும பங்குகளும் உயர்வுடன் உள்ளது.
வங்கி பங்குகள்
GQG Partners Inc நிறுவனம் அதானி குழுமத்தில் செய்த சுமார் 15,446 கோடி ரூபாய் முதலீடு வங்கி பங்குகள் உயர முக்கிய காரணமாக உள்ளது. இன்று நிஃப்டி வங்கி குறியீடு 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் - 16.97 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 9.81 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.99 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 5.00 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 4.99 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 5.11 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 5.70 சதவீத உயர்வு
NDTV - 4.98 சதவீதம் உயர்வு
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications