வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகம் அதிகளவிலான பாதிப்பை சந்திக்கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவில் இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக துவக்கத்தில் கணிசமான வர்த்தக உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, எச்டிஎப்சி வங்கி மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கி மீதான அதிக முதலீட்டில் கணிசமான உயர்வை அடைந்தது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 107.30 புள்ளிகள் உயர்வுடன் 31,809.55 புள்ளிகளை அடைம்கு செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலேவே சில ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிஃப்டி குறியீடு இன்று 39.35 புள்ளிகள் வரை உயர்ந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், கோட்டாக் வங்கி, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை அடைந்தது.


Click it and Unblock the Notifications