மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 25 வருடத்தில், அதாவது 1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 3,200 புள்ளிகளில் இருந்து 47055.69 வரையிலான உயர்வை அடைந்துள்ளது.
இக்காலகட்டத்தில் வரும் சராசரியாக 9.2 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்த சென்செக்ஸ் 2020ல் பல்வேறு வர்த்தகத் தடைக்கு மத்தியில் சுமார் 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2020ல் சென்செக்ஸ்
கொரோனா தொற்றுக் காரணமாக 2020 துவக்கத்திலேயே தடுமாற்றத்துடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்த காரணத்தால் அன்னிய முதலீடுகள் இந்தியச் சந்தையில் குறைந்தது. இதனால் பிப்ரவரி மாதம் முதல் துவங்கி சென்செக்ஸ் சரிவு லாக்டவுன் அறிவிப்பு வெளியான போது 41,000 புள்ளிகளில் இருந்து 25,900 புள்ளி வரையில் சரிந்தது.
மார்ச் மாத சரிவின் மூலம் சென்செக்ஸ் குறியீடு சுமார் 4 வருடத்திற்குப் பின்னோக்கி சென்றது.
பொருளாதார மந்தநிலை
இது மட்டும் அல்லாமல் ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில், இந்தியப் பொருளாதாரம் வரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
மேலும் மார்ச் மாத சரிவில் இருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சுமார் 85 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் முக்கியமான நிப்டி மிட்கேப் 100 குறியீடு 100 சதவீதமும் மற்றும் நிப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 116 சதவீதமும் வளர்ச்சி அடைந்தது.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்
அமெரிக்கத் தேர்தல் முடிவுக்குப் பின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடி சந்தையாக இந்தியா மாறிய நிலையில், அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 1.41 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. இதில் 2002 முதல் சேகரிக்கப்பட்டு வரும் NDSL தகவல்களின் அதிகப்படியானது.
அதிக லாபமடைந்த துறைகள்
2020ல் பார்மா மற்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக NSE பார்மா பங்குகள் 2020ல் 60.56 சதவீதமும், ஐடி பங்குகள் 53 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஐடி நிறுவனப் பங்குகள் வளர்ச்சி அடைய முக்கியக் காரணம் ஜூன், செப்டம்பர் காலாண்டில் ஐடி நிறுவனங்கள் வொர்க் பரம் ஹோம்-ஐ சிறப்பான முறையில் பயன்படுத்தித் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் மேம்படுத்தியது. இதன் வாயிலாக முதலீட்டாளர்கள் அதிகளலில் முதலீடு செய்தனர்.
வங்கி, ரியாலிட்டி துறை
இதேவேளையில் கொரோனா பாதிப்புக்களை எதிர்கொள்ள முடியாமலும், சரிவிலிருந்து மீண்டு வர முடியாமலும் தவித்து வருகிறது வங்கி மற்றும் ரியாலிட்டி துறை. இன்றளவும் இந்திய வங்கிகள் சுமார் 5.5 சதவீத சரிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக லாபத்தை அடைந்த 5 நிறுவனங்கள்
- திவி லேப்ஸ் 103% வளர்ச்சி
- டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 81% வளர்ச்சி
- சிப்லா 74% வளர்ச்சி
- இன்போசிஸ் 69% வளர்ச்சி
அதிக நஷ்டத்தை எதிர்கொண்ட 4 நிறுவனங்கள்
- இன்டஸ்இந்த் வங்கி 44% வீழ்ச்சி
- கோல் இந்தியா 36% வீழ்ச்சி
- இந்தியன் ஆயில் 28% வீழ்ச்சி
- யூபிஎல் 23% வீழ்ச்சி
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications