வங்கி மற்றும் எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு உயர்வைச் சந்தித்துள்ளன. லிபியாவில் மீண்டும் கச்சா எண்ணெய் உற்பத்தி துவங்கிய பிறகு சென்ற வாரம் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் வரை குறைந்தது.
அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களா இந்திய பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. எனவே இன்றைய பங்கு சந்தை நிலவரத்தினை இங்குப் பார்க்கலாம்.
இன்றைய சந்தை நிலவரம்
பங்கு சந்தை வர்த்தகம் முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 196.19 புள்ளிகள் என 0.54 சதவீதம் உயர்ந்து 36,519.96 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 71.20 புள்ளிகள் என 0.65 சதவீதம் உயர்ந்து 11,008.05 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் எண்ணெய் மற்றும் எரிவாயு, எனர்ஜி, வங்கி, அடிப்படை பொருட்கள் மற்றும் ஹெல்த்கேர் துறை பங்குகள் லாபம் அளித்தன. அதே நேரம் எப்எம்சிஜி பங்குகள் 0.80 சதவீத வரை சரிந்து வர்த்தகமானது.
லாபம் அளித்த நிறுவனங்கள்
எஸ்பிஐ, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸ் நிறுவனப் பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
இந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், இண்டஸ் இண்டு வங்கி, ஐடிசி, இன்போசிஸ், கோடாக் வங்கி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.


Click it and Unblock the Notifications