வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் டிசம்பர் மாத ஆர்டர்கள் முடியும் நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவை சந்தித்தது.
இன்று ஜனவரி மாதத்திற்கான ஆர்டர்கள் துவங்கியுள்ள நிலையில் உள்நாட்டுச் சந்தை முதலீடுகள் அதிகளவில் குவிந்தது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 208.80 புள்ளிகள் வரையில் உயர்ந்து 34,056.83 புள்ளிகளை அடைந்து இந்த வார வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 2 நாளாகச் சென்செக்ஸ் இழந்த 34,000 புள்ளிகள் என்ற இடத்தை இன்று பிடித்து அசத்தியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் 52.80 புள்ளிகள் உயர்ந்து 10,530.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது,


Click it and Unblock the Notifications