தடுமாறி வந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் மார்ச் மாதத்திற்கான ஆர்டர்கள் துவங்கியதாலும், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகளாலும் திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வான நிலையை அடைந்துள்ளது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
அமெரிக்காவின் மத்திய வங்கியாகத் திகழும் பெடரல் ரிசர்வ் ஆய்வில் நாட்டின் வளர்ச்சி நிலையாக இருக்கும் காரணத்தால் வட்டி உயர்வு குறித்த முடிவுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாகக் கடந்த 2 வாரத்தில் இந்திய சந்தையை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
உலகச் சந்தை
மார்ச் மாத ஆர்டர்களில் முதலீடு செய்யப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் ஆர்வம் செலுத்திய காரணத்தால் இன்று மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு அதிகமாகக் காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 303.60 புள்ளிகள் உயர்ந்து 34,445.75 புள்ளிகளை அடைந்துள்ளது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 91.55 புள்ளிகள் உயர்ந்து 10,582.60 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மாருதி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications