நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இது கடந்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்று மீண்டும் ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது.
இது கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது.
எனினும், அமெரிக்காவின் ஜிடிபி விகிதம், பணவீக்கம் பற்றிய கவலைகள், தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவும் மக்களை பாடாய்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்
இந்தியாவில் சற்று குறைந்து வரும் கொரோனாவின் தாக்கம், பொருளாதார வளர்ச்சியினை விரைவில் மிட்டெடுக்க பயன்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பல சர்வதேச காரணிகளும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளன. அதோடு பல நிறுவனங்களின் மார்ச் காலாண்டு அறிக்கைகள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், அதுவும் கவனிக்கதக்க விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 222.95 புள்ளிகள் அதிகரித்து, 50,874.85 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 22.20 புள்ளிகள் அதிகரித்து, 15,219.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 252.64 புள்ளிகள் அதிகரித்து, 50,904.54 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 84.20 புள்ளிகள் அதிகரித்து, 15,281.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1513 பங்குகள் ஏற்றத்திலும், 254 பங்குகள் சரிவிலும், 53 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, பி.எஸ்.இ கேப்பிட்டல் கூட்ஸ், பி.எஸ்.இ ஹெல்த்கேர் பல குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பிரிட்டானியா, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், எம்&எம், பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 185.05 புள்ளிகள் அதிகரித்து, 50,844.44 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70 புள்ளிகள் அதிகரித்து, 15,267.70 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படியிருப்பினும் இன்று இன்னும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புராபிட் புக்கிங் காரணத்தினாலும், அடுத்த காண்டிராக்டில் ரோல் ஓவர் செய்வதாலும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications