ஒரு வார வர்த்தக சரிவை சமன் செய்த சென்செக்ஸ்..!
5 நாட்கள் தொடர் சரிவில் இருந்து சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் மீண்டுள்ளது. இன்று நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவுகள் வெளியாகிறதால் முதலீட்டாளர்கள் கூடுதல் முதலீட்டை இந்திய சந்தையில் செய்துள்ளனர்.

மேலும் ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகம், முக்கிய துறை சார்ந்த நிறுவனங்களின் அதீத முதலீடு ஆகியவை இன்று அதிகளவிலான வர்த்தகத்தை ஈர்த்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 235.44 புள்ளிகள் உயர்ந்து 31,449.03 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு நிலையான வர்த்தகத்துடன் 83.35 புள்ளிகள் உயர்ந்து 9,794.15 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications