செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
புதன்கிழமை வர்த்தகமும் சரிவுடனே இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் உயர்வு மற்றும் ஆசிய சந்தையில் நிலவிய சாதகமான வர்த்தக சூழ்நிலை இன்றைய வர்த்தக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
சென்செக்ஸ்
ரூபாய் மதிப்பின் வலிமையான நிலை, இன்று காலை வர்த்தகம் துவக்கத்தில் ஏற்பட்ட உயர்விற்கு உறுதுணையாக இருந்தது. இதனை தொடர்ந்து வட கொரியா ஏவுகணை மேற்கு ஜப்பான் பகுதியில் பறந்ததால் ஏற்பட்ட பதற்றம் தனிந்து ஆசிய சந்தையில் ஏற்பட்ட சாதகமான வர்த்தக சூழ்நிலையின் மூலம் இன்றும் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வுடன் இருந்தது.
தொடர்
செவ்வாய்க்கிழமை மளமளவென சரிந்த சென்செக்ஸ் குறியீடு இன்று நிலையான மற்றும் உறுதியான வர்த்தகத்தை பெற்றது, இதன் காரணமாக இன்று சென்செக்ஸ் குறியீடு 31,710 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 258.07 புள்ளிகள் உயர்ந்து 31,646.46 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிலையான வர்த்தகத்தை பெற்ற நிஃப்டி குறியீடு இன்று 9,884.40 புள்ளிகளை அடைந்து முடிவிற்கு வந்தது.
முக்கிய நிறுவனங்கள்
பிஎஸ்ஈ சந்தையில் எஸ் அண்ட் பி குறியீட்டின் கீழ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று 2.12 சதவீதம் வரை உயர்ந்து அசத்தியது.
பிற நிறுவனங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications