இந்திய பங்கு சந்தை வியாழக்கிழமை நட்டத்துடன் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை லாபத்துடன் முடிவடைந்துள்ளது. காலைச் சந்தை துவங்கும் போது மந்தமாகத் துவங்கிய நிலையில் சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரினால் ஆசிய பங்கு சந்தைகள் பிளாட்டாகவே இருந்தன. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டு 69 ஆகச் சரிந்தது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 83.31 புள்ளிகள் என 0.23 சதவீதம் உயர்ந்து 35,657.86 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 22.90 புள்ளிகள் என 0.21 சதவீதம் உயர்ந்து 10,722.65 புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆனது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையில் ஆட்டோமொபைல், ரிலயாலிட்டி, கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் லாபம் அளித்துள்ள நிலையில், ஹெல்த்கேர், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எப்எம்சிஜி துறை சார்ந்த பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
ஹீரோ மோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், மகேந்திரா & மகேந்திரா மற்றும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் இன்று லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
சன் பார்மா, எண்டிபிசி, எச்டிஎப்சி, விப்ரோ, வேதாந்தா, ஐசிஐசிஐ பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications