அமெரிக்காவில் வேகமாக வட்டி விகிதங்கள் உயர்ந்த பிரச்சனை குறித்து ஃபெடரல் வங்கி கருத்து தெரிவித்ததை அடுத்து இந்திய பங்கு சந்தை வேகமாக முன்னேற்றத்தினைக் கண்டது.
கடந்த சில வாரங்களாகப் பங்கு சந்தைகள் கண்டு வந்த சரிவுகளில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பும் போது பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி போன்றவை பெறும் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தன. பணவீக்கம் போன்ற காரணங்களால் விரைவில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 322.65 புள்ளிகள் என 0.95 சதவீதம் உயர்ந்து 34,142.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. மறுபக்கம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 108.35 புள்ளிகள் என 1.04 சதவீதம் உயர்ந்து 10,491.05 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு
வியாழக்கிழமை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மூன்று மாதங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்து 65.04 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 64.73 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.
அமெரிக்கப் பத்திரங்கள்
அமெரிக்கப் பத்திர முதலீடுகளின் வருவாய்ச் சர்ந்தது. ரூபாய் மதிப்பு உயர்ந்த காரணத்தினால் பார்மா நிறுவனப் பங்குகள் மிகப் பெரிய உயர்வை அளித்துள்ளன.
பார்மா துறை பங்குகள்
நிப்டியில் பார்மா துறை சார்ந்த பங்குகள் 2.63 சதவீதம் வரை இன்று உயர்ந்தது. ஆனால் இந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து 8 சதவீதம் வரை சரிவை சந்தித்து இருந்தது. சன் பார்மா நிறுவனப் பங்குகள் 5 சதவீதமும், டாக்ட்டர் ரெட்டிஸ் லேப் மற்றும் அரபிந்தோ பார்மா நிறுவனப் பங்குகள் 2 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன.
வங்கித் துறை பங்குகள்
வங்கித் துறை பங்குகளும் லாபம் அளித்துள்ள நிலையில் எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் இன்று நல்ல லாபத்தினை அளித்துள்ளது.
லாபம் அளித்த நிறுவனங்கள்
டாடா ஸ்டீல், சன் பார்மா, யெஸ் வங்கி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகள் இன்று அதிகம் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
ஏசியன் பெயிண்ட்ஸ், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் இன்று பங்கு சந்தையில் நட்டம் அளித்துள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications