மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் புதன்கிழமை புதிய உச்சத்தினைத் தொட்டத்தை அடுத்து வியாழக்கிழமையும் 37,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டியும் 11,163 புள்ளிகளை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
சந்தை நிலவரம்
காலை 9:50 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 89.15 புள்ளிகள் என 0.13% உயர்ந்து 36,941.59 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 25.90 புள்ளிகள் என 0.23% உயர்ந்து 11,157.45 புள்ளிகளாகவும் உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
வியாழக்கிழமை டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 22 பைசா சரிந்து 69.37 ரூபாயாக உள்ளது.
லாபம் அளித்து வரும் பங்குகள்
எஸ்பிஐ, எல்&டி, ஐடிசி, பார்தி ஏர்டெல் மற்றும் ஹீரோ மொட்டோ கார்ப் பங்குகள் லாபம் அளித்து வருகின்றன.
நட்டம் அளித்து வரும் பங்குகள்
ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், விப்ரோ, வேதாந்தா, ஆக்சிஸ் வங்கி மற்றும் இன்போசிஸ் பங்குகள் நட்டத்தினை அளித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications