வரலாறு காணாத புதிய உயரத்தை அடைந்தது சென்செக்ஸ்..!
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் சர்வதேச சந்தையின் வர்த்தகச் சூழல், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 63.93 ரூபாயாக உயர்ந்து போன்ற காரணங்களால் வரலாறு காணாத அளவு உயர்ந்து என்று 30,133.09 புள்ளிகளுடன் இன்றைய சந்தை முடிவடைந்தது.
2015 மார்ச் மாதம் 30,024 புள்ளிகளைத் தொட்டதே மும்பை பங்குச் சந்தை வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாக இருந்தது. அது இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 190.11 புள்ளிகள் அதாவது 0.63 சதவீதம் உயர்ந்து 30,133.35 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 45.25 புள்ளிகள் அதாவது 0.49 சதவீதம் உயர்ந்து 9,351.85 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
இன்று லாபத்தை நோக்கிப் பயணித்த டாப் 5 நிறுவனப் பங்குகள் எம் அண்ட் எம் (+3.63%), ஐடிசி (+ 3.33%), எச்டிஎப்சி (+ 2.55%), ஹூல் (+ 1.78%) மற்றும் சிபலா (+ 1.47%) ஆகும்.
அதே நேரம் இன்று சரிவை நோக்கிப் பயணித்த பங்குகள் என்றால் அதானி போர்ட்ஸ் (-2.31%), இன்ஃபோசிஸ் (-1.55%), பவர் கிரிட் (-1.3%), ரிலையன்ஸ் (-1.22%) மற்றும் டாக்டர் ரெட்டி (-1.16%) ஆகும்.


Click it and Unblock the Notifications