இந்திய பங்கு சந்தையானது நடப்பு நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது. குறிப்பாக டெக்னாலஜி பங்குகள், வங்கிகள், எனர்ஜி மற்றும் நிதி நிறுவன பங்குகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றத்தின் மத்தியில் சர்வதேச சந்தையில், ஆசிய சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 1031 புள்ளிகள் அல்லது 1.78% ஏற்றம் கண்டு, 58,992 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி இன்டெக்ஸ் 279 புள்ளிகள் அல்லது 1.63% ஏற்றம் கண்டு, 17,360 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இன்டெக்ஸ்கள் வலுவான ஏற்றம்
இன்றைய வர்த்தக அமர்வில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் வலுவான ஏற்றத்தினை கண்டு முடிவடைந்துள்ளன. நிஃப்டி மிட் கேப் 100 0.87% ஏற்றம் கண்டும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 1.61% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. விக்ஸ் இன்டெக்ஸ் ஆனது 5.08% குறைந்து, 12.94% ஆக குறைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், நெஸ்டில், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் பங்குகள் டாப் கெயினர்களாகவும், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், சன் பார்மா, அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், நெஸ்டில், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
ஏற்ற இறக்கம் இருக்கலாம்
சர்வதேச சந்தையில் பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தாக்கத்தினை ஏற்படுத்தலாம், இதற்கிடையில் ரிசர்வ் வங்கு வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் வரவிருக்கும் வாரத்திலும் சந்தையில் ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications