மந்தமான வர்த்தகத்தால் சென்செக்ஸ் 166 புள்ளிகள் சரிவு..!
இன்று மத்திய அரசு மே மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் தரவு மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி தரவுகளை மாலை வெளியாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இன்று குறைவான அளவிலேயே முதலீடு செய்தனர்.
இதனுடன் பிரட்டன் தேர்தல் ஆசிய சந்தையில் பெரிய அளவிலான மந்த நிலையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தகம் சரிவில் முடிந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை முதல் தொடர் வர்த்தகச் சரிவில் இருந்த காரணத்தினால் 166.36 புள்ளிகள் சரிவுடன் 31,095.70 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிஃப்டி குறியீடு இன்று 51.85 புள்ளிகள் சரிவுடன் 9,616.40 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications