அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை ஜூன் மாத கூட்டத்தில் உயர்த்தத் திட்டமிட்டு, நேற்றைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் இன்றைய வர்த்தகம் மந்தமாக இருக்கும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் துவங்கிய முதல், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவிலேயே வர்த்தகம் செய்யப்பட்டது.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 187.76 புள்ளிகள் சரிந்து 34,915.38 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 61.40 புள்ளிகள் உயர்ந்து 10,618.25 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, யெஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது.


Click it and Unblock the Notifications