ஜிடிபி முதலீட்டாளர்களைக் கவர தவறியது.. சென்செகஸ் 330 புள்ளிகள் வரை சரிவு..!
இந்தியாவின் ஜிடிபி ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, ஏற்றுமதியில் சரிவு, வளர்ச்சி தட்டங்கள் தேக்கம் எனப் பல்வேறு காரணங்களால் கடந்த 5 காலாண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவீதம் என்ற கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சி பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கவரவில்லை. இதன் காரணமாக இன்றை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்தது.

மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 330 புள்ளிகள் வரையில் சரிந்த நிலையில், வர்த்தக முடிவில் 316.41 புள்ளிகள் சரிந்து 33,000 புள்ளிகள் அளவீட்டில் இருந்து இறங்கி 32,832.94 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி குறியீடு 104.75 சரிந்து 10,121.80 புள்ளிகளை அடைந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications