மும்பை பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று, அனைத்து குறியீடுகளும் சரிவில் உள்ளன. குறிப்பாக முன்னணி குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி பலத்த சரிவில் திறந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. காலை ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரையிலும், நிஃப்டி 200 புள்ளிகளை தாண்டியும் சரிவிடைந்துள்ளன. அதிகபட்சமாக நிஃப்டி வங்கி குறியீடு 161 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இவை தவிர நிஃப்டி ஐடி, நிஃப்டி பார்மா உள்ளிட்ட அனைத்து துறை பங்குகளும் சரிவிவில் உள்ளன.
பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான அமெரிக்க வேலை வாய்ப்பு அறிக்கைக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்ததால், இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளிக்கிழமை கடுமையாக சரிந்தன. இவற்றில் PSU வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ மற்றும் கன்சுயூமர் டூரபிள்ஸ் உள்ளிட்ட முக்கிய துறைகள் சரிவைக் கண்டன. 13 முக்கிய துறைகளில் பத்து பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் நஷ்டத்தை சந்தித்தன.

பிஎஸ்இயில் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.4.46 லட்சம் கோடி குறைந்து ரூ.461.22 லட்சம் கோடியாக உள்ளது.
சென்செக்ஸ் பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, இன்ஃபோசிஸ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை குறியீட்டின் சரிவுக்கு முக்கிய பங்களிப்பை அளித்தன. துறை வாரியாக, நிஃப்டி பொதுத்துறை வங்கி மற்றும் ஆயில் & கேஸ் குறியீடுகள் 2%க்கும் மேல் சரிந்தன. அதே நேரத்தில் ஆட்டோ, வங்கி, மீடியா, உலோகம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகள் 1%க்கும் மேல் சரிந்தன. உள்நாட்டில் கவனம் செலுத்திய ஸ்மால் கேப்கள் 0.9% சரிந்தன, மிட் கேப்கள் 1.3% சரிந்தன. இதற்கிடையில், துணை நிறுவனமான விவா ஹைவேஸ் புனே நிலத்தை ரூ.453 கோடிக்கு பணமாக்கிய பிறகு அசோகா பில்ட்கான் 6% உயர்ந்தது.
பங்குகளை பொறுத்தவரை கோத்ரெஜ் 6.74% உயர்விலும், ஆஸ்டராஜேனகா 5.59% உயரவிலும், க்ளென்மார்க் லைப், குஜராத் கெமிக்கல் தலா 5% உயர்வில் லாபத்துடன் வர்த்தகமாகின்றன. அதேபோல், வோடாபோன் ஐடியா 13% சரிவில் நஷ்டத்துடனும், இண்டஸ் டவர் 6% சரிவிலும், ஜிஏன்எஃப்சி, இண்டிகோ பெயிண்ட் ஆகிய பங்குகளும் சரிவில் நஷ்டத்துடனும் உள்ளன.
தற்போதைய நிலவரப்படி மதியம் 12.15 மணியளவில் சென்செக்ஸ் 735 புள்ளிகள் சரிவில் 81,442 புள்ளிகளாகவும், நிஃப்டி 210 புள்ளிகள் சரிவில் 24,934 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின்றன.
இன்று முக்கிய அமெரிக்க வேலைகள் தரவு பதட்டம், கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சி தரவுகளுக்கு முன்னால் வங்கி பங்குகளில் சரிவு, மந்தமான உலகளாவிய சந்தை மனநிலை மற்றும் எஃப்ஐஐகள் நிகர விற்பனையாளர்களாக மாறியது உள்ளிட்ட காரணிகள் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications