முதல் நாளே குழப்பம் தான்.. 158 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!

வாரத்தின் முதலாவது நாளான இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 158 புள்ளிகள் குறைந்து, 39,455 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 46 புள்ளிகள் குறைந்து, 11,599 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

ஆரம்பத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி பின் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. வாரத்தின் முதல் நாளே குழப்பத்தில் தான் சந்தை வர்த்தகமாக தொடங்கியுள்ளது. இதே ப்ரீ ஒப்பனிங் சந்தையிலும் சென்செக்ஸ் 191.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 39,805 ஆகவும், இதே நிஃப்டி 122 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 11,764 ஆகவும் இருந்தது.

முதல் நாளே குழப்பம் தான்.. 158 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!

இந்நிலையில் 782 பங்குகள் ஏற்றத்துடனும், 319 பங்குகள் சரிவுடனும், 47 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

இதற்கிடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து இண்டெக்ஸ்களும் சிவப்பு நிறத்திலும், இல்லையேல் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி, பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ரிலையன்ஸ், டிவிஸ் லேப்ஸ், ஹெச்சிஎல் டெக், யுபிஎல், ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி, பார்தி ஏர்டெல், எண்டிபிசி, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

நாளை நடக்கவிருக்கும் அமெரிக்கா தேர்தலையடுத்து, யார் ஜெயிப்பார்களோ? ஊக்கத் தொகை என்ன ஆகுமோ? பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்குமோ? என்ற குழப்பத்திற்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பய உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகின்றது. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+