வாரத்தின் மூன்றாவது நாளான இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 629 புள்ளிகள் குறைந்து, 39,892 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 167 புள்ளிகள் குறைந்து, 11,722 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.90 ரூபாயாக சரிவடைந்து காணப்படுகிறது. எனினும் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப், யுபிஎல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், மாருதி சுசூகி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக் பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதற்கிடையில் டைட்டன் நிறுவனத்தின் நிகரலாபம் 37.8 சதவீதம் குறைந்து, 199 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 320 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் வருவாய் 2.6 சதவீதம் குறைந்து, 4,318 கோடி ரூபாயாகவும், இது முன்பு 4,435 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே EBITDA 42.7 சதவீதம் குறைந்து 294 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 513 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கிடையில் டைட்டன் நிறுவனத்தின் பங்கு விலையானது 2.22% குறைந்து, 1205.50 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதே பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 18.7 சதவீதம் வளர்ச்சி கண்டு 105.3 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த காலாண்டில் 88.7 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 75.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. டெக் மகேந்திராவின் அதிரடி அறிவிப்பு.. லாபம் ரூ.1,065 கோடி..!
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பய உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் சிலவும் சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் காணப்படுகிறது.