இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஜிடிபி வளர்ச்சி எண்கள் இன்று மாலை வெளியாக இருக்கின்றன. இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வர வாய்ப்பு இருப்பதாக பல தரகு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கணித்து இருக்கின்றன. இந்த ஒரு மேக்ரோ பொருளாதார செய்தியே இன்று ஒட்டு மொத்த சந்தையையும் 41,000 புள்ளிகளுக்குக் கீழ் கொண்டு வந்திருக்கிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் 41,130 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 41,138 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,724 என்கிற குறைந்தபட்ச புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, சுமார் 400 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அதே போல நிஃப்டி நேற்று மாலை 12,151 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,146 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 12,035 என்கிற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட சுமார் 110 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. பி.எஸ்.இ-யில் 2,272 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 992 பங்குகள் ஏற்றத்திலும், 1,127 பங்குகள் இறக்கத்திலும், 153 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மொத்தம் 2,272 பங்குகளில் 35 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 73 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ஏர்டெல், அதானி போர்ட்ஸ், பார்தி இன்ஃப்ராடெல், என் டி பி சி, பாரத் பெட்ரோலியம் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், யெஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலிவர், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.72 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 63.01 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications