599 புள்ளிகள் வீழ்ச்சியில் சென்செக்ஸ்.. நிஃப்டி 11,700க்கு மேல் நிறைவு..!

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் காலையிலேயே சரிவில் தொடங்கியது.

இந்த நிலையில் முடிவில் சென்செக்ஸ் 599 புள்ளிகள் குறைந்து 39,922 ஆகவும். இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 159 புள்ளிகள் குறைந்து, 11,729 ஆக நிறைவு பெற்றுள்ளது.

599 புள்ளிகள் வீழ்ச்சியில் சென்செக்ஸ்.. நிஃப்டி 11,700க்கு மேல் நிறைவு..!

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.87 ரூபாயாக சரிவடைந்து காணப்படுகிறது.

நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது. இதில் 979 பங்குகள் ஏற்றத்துடனும், 1,606 பங்குகள் சரிவுடனும், 153 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப், யுபிஎல், எம்&ஏம், ஈச்சர் மோட்டார் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், மாருதி சுசூகி, எம் & எம், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, டெக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பய உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் சிலவும் சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் காணப்படுகிறது.

ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் பெரிதும் லாக்டவுனால் முடங்கிய நிலையில், பொருளாதாரம் சரிந்தது. இந்த நிலையில் இன்னும் எந்த மாதிரியான ஏற்ற தாழ்வுகளை உருவாக்குமோ? தெரியவில்லை. அதோடு அமெரிக்காவில் வரவிருக்கும் தேர்தலில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், ஊக்கத் தொகை குறித்தான நிச்சயமற்ற சூழல் குறித்தான அறிவிப்புகள் சந்தை சரிவினை ஏற்படுத்தியுள்ளன.

இதோடு பீகாரில் நடந்து வரும் தேர்தல் குறித்தான கணிப்புகள் சந்தையில் சரிவினை ஏற்படுத்தியுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+