ஆசிய சந்தையில் இன்று நிலையான வர்த்தகத்தை அடைந்தாலும், மும்பை பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியே எடுத்த காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
தொடர் சரிவு
உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இன்று சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர்.
இதன் காரணமாக இன்று வர்த்தகம் முழுவதும் சரிவிலேயே பயணித்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 286.71 புள்ளிகளை சரிந்து 34,010.76 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 93.20 புள்ளிகள் சரிந்து 10,452.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
வங்கித்துறை பங்குகள் அதிக பாதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் எஸ் அண்ட் பி குறியீடின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 2.30 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.
அதேபோல் கோட்டாக் வங்கி, இன்போசிஸ், டாக்டர் ரெட்டி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
தற்போது பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 11,300 கோடி ரூபாய் மோசடி இந்நிறுவன பங்குகளை பாதித்துள்ளது. கடந்த 4 நாள் வர்த்தகத்தில் மட்டும் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications