இந்திய வங்கித்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி உள்நாட்டு முதலீட்டாளர்களை மட்டுமல்ல வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் இருந்தே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை
இன்று ஆசிய சந்தையும் உயர்வான வர்த்தகத்தைப் பெற்று இருக்கும் போது மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களது முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.
வங்கித்துறை பங்குகள்
பொதுவாக மும்பை பங்குச்சந்தையில், வங்கிகள் மீதான முதலீடு அதிகமாகவே இருக்கும். இதில் உள்நாட்டு முதலீட்டாளர்களை விடவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்வார்கள், இதனாலேயே இந்திய பொருளாதாரத்திற்கு வங்கிகள் முதுகெலும்பு எனக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
இன்றைய வர்த்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 52 வாரச் சரிவு அதாவது 113.10 ரூபாய் அளவு வரையில் சரிவடைந்துள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் இவ்வங்கியின் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்துள்ளது.
சென்செக்ஸ்
மதியம் 2 மணி அளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 346.08 புள்ளிகள் சரிந்து 33,664.68 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 109.15 புள்ளிகள் வரையில் சரிந்து 10,3434.15 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய வங்கிகள்
இன்றைய வர்த்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி 8 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
அதேபோல் பாங்க் ஆ பரோடா 6 சதவீதமும், எஸ்பிஐ 3.81 சதவீதமும், பெடரல் வங்கி 3.39 சதவீதமும், இன்டஸ்இன்ட் வங்கி 2.28 சதவீதம் வரையில் சரிந்து வங்கித் துறை முதலீட்டாளர்களுக்கு ரத்த கண்ணீர் வரவைத்துள்ளது.


Click it and Unblock the Notifications