அமெரிக்கச் சீன வர்த்தகப் பிரச்சனை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, ஜூன் மாத ஆர்டர்கள் முடிவு எனப் பல காரணங்களுக்காக மும்பை பங்குச்சந்தை கடந்த இரு நாட்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் இன்று ஜூலை மாதத்திற்கான ஆர்டர்கள் துவங்கிய நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர்.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் காலை முதல் தொடர்ந்து உயர்வைச் சந்தித்தது மட்டும் அல்லாமல் 2 நாள் சரிவை இன்று ஓரே நாளில் ஈடு செய்தது,

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 385.84 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ் 35,423.48 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 125.20 புள்ளிகள் உயர்ந்து 10,714.30 புள்ளிகள் எட்டி இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.
மேலும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, யெஸ் வங்கி, ரிலையன்ஸ், எல்ஐசி, ஆதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி ஆகியவை 2.5 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
அதேபோல் இன்டஸ்இந்த் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், எச்டிஎப்சி வங்கி, மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தனர்.


Click it and Unblock the Notifications