சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக மே மாதம் மொத்த விலை பணவீக்கம் 14 மாத உயர்வான 4.43 சதவீதம் வரையில் உயர்ந்தது.
இதோடு அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் உயர்த்தியது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவைச் சந்தித்தது.

ரீசர்வ் வங்கி தனது நாணய கொள்கையில் வட்டி விகிதங்களை உயர்த்திய பின்பு தொடர்ந்து உயர்ந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று 39.34 புள்ளிகள் சரிந்து 35,599.82 புள்ளிகளை அடைந்துள்ளது, அதேபோல் நிஃப்டி 48.65 புள்ளிகள் சரிந்து 10,808.05 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, யெஸ் வங்கி, இன்டஸ்இந்த் வங்கி, டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ் வங்கியவை உயர்வடைந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், டிசஎஸ், எஸ்பிஐ, எஸ்பிஐ வங்கி ஆகியவை சரிவடைந்தது.


Click it and Unblock the Notifications