பட்ஜெட்டுக்கு பின் பாயத் தொடங்கும் Sensex! மெல்ல ஏறும் Nifty!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,961 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 39,131 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. பட்ஜெட் அறிவித்த ஜூலை 05, 2019-க்குப் பிறகு 39,000 என்கிற மாய எண்ணுக்கு மேல் நிறைவடைவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட 234 புள்ளிகள் அதிகரித்து இன்று வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,596 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,662 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 75 புள்ளிகள் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. சென்செக்ஸை போலவே நிஃப்டியும் பட்ஜெட்க்குப் பிறகு 11,650 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நிறைவடைந்திருப்பது இதுவே முதல் முறை.

பட்ஜெட்டுக்கு பின் பாயத் தொடங்கும் Sensex! மெல்ல ஏறும் Nifty!

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 09 பங்குகள் இறக்கத்திலும், 11 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 12 பங்குகள் இறக்கத்திலும், 38 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

பி.எஸ்.இ-யில் 2,631 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,162 பங்குகள் ஏற்றத்திலும், 1,299 பங்குகள் இறக்கத்திலும், 170 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,631 பங்குகளில் 32 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 303 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டியில் ஐடி, மீடியா ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற துறை சார் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. எனர்ஜி, பார்மா, பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் ரியாலிட்டி போன்ற துறை சார் வங்கிகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் யெஸ் பேங்க், இன்ஃபோசிச், ஹெச் டி எஃப் சி பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், சன் பார்மா, போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டிசிஎஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், யூ பி எல், பிரிட்டானியா போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஜூலை 15, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் 0.17% வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஜூலை 16, 2019-ல் ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஸ்.இ 0.16%, பிரான்சின் சி ஏ சி 0.15% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -0.03% வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்குச் சந்தைகள் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜப்பானின் நிக்கி அதிகபட்சமாக -0.69% இறக்கத்தில் வர்த்தகமானது. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தான் ஆசிய பங்குச் சந்தைகளிலேயே 0.61% ஏற்றத்தில் வர்த்தகமானது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.66 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 66.64 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+