நாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இன்று தனது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது.
இன்று முதல் அமலாக்கம் செய்யப்பட்ட இரட்டை வட்டி விதிப்பின் மூலம் ஸ்டேட் வங்கிக்கு அதிகளவிலான லாபமும் வருமானமும் கிடைக்கும். இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் மீது அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தக துவக்கம் முதல் நிலையான வர்த்தகம் பெற்று வந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு, ஐரோப்பிய சந்தையின் துவக்கத்திலும் கூடுதல் உயர்வை பெற்று சுமார் 220 புள்ளிகள் வரை உயர்ந்து.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நிலையான வர்த்தக உயர்வின் மூலம் இன்று வர்த்தக முடிவில் 205.06 புள்ளிகள் உயர்ந்து 32,514.94 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிலையான வர்த்தக உயர்வில் 62.60 புள்ளிகள் உயர்ந்து 10,077.10 உயர்ந்துள்ளது.
முக்கிய நிறுவன
இன்றைய வர்த்தக முடிவில் எஸ்பிஐ வங்கி, பவர் கிரின்ட் 4 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு உயர்ந்து, மேலும் டாடா ஸ்டீல், எல் எண்ட் டி, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி அதிகளவில் வளர்ந்தது.
மேலும் சன் பார்மா, டாக்டர் ரெட்டி, லுப்பின், ஐடிசி, சிப்லா ஆகிய நிறுவனங்கள் 2 சதவீத்திற்கும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications