சர்வதேச நாணய நிதியம் இந்திய பங்கு சந்தை உலகின் டாப் 5 பங்கு சந்தையில் ஒன்றாக வரும் என்றும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அமெரிக்காவின் செலவின மசோதாவில் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்ட முடிவுகளுக்கு இரு கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஷட்டவுன் தடுக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் இன்று அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த முடிவுகளின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
இன்றைய நிலவரம்
மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.96 சதவீதம் என 341.97 புள்ளிகள் உயர்ந்து 36,139.98 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டியும் முதன் முறையாக 11,000 புள்ளிகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. இன்றைய சந்தை நேர முடிவில் 1.07 சதவீதம் என 117.50 புள்ளிகள் உயர்ந்து 11,083.70 புள்ளிகளாக நிப்டி வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை சார்ந்த அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பெருத்தவரையில் மெட்டல் துறை பங்குகள் 4.29 சதவீதமும், பொதுத் துறை நிறுவனப் பங்குகள் 2.15 சதவீதமும், எண்ணெய் நிறுவனப் பங்குகள் 1.93 சதவீதமும், வங்கி துறை பங்குகள் 1.63 சதவீதமும் லாபத்தினை அளித்துள்ளது. அதே நேரம் நுகர்வோர் சாதன துறை பங்குகள் 0.33 சதவீதம் வரை சரிந்துள்ளது.
லாபம் ஈட்டிய பங்குகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (+ 3.84%), டாடா ஸ்டீல் (+ 3.72%), ஓஎன்ஜிசி (+ 3.6%), ஐசிஐசிஐ வங்கி (+ 3.06%) மற்றும் கோல் இந்தியா (+ 3.04%
நட்டம் அளித்த பங்குகள்
விப்ரோ (-1.5%), டாடா மோட்டார்ஸ் (-0.83%), ஆசிய பெயின்ட்ஸ் (-0.75%), ஹெச்டிஎப்சி வங்கி (-0.64%) மற்றும் டிசிஎஸ் (-0.42%)
முக்கியக் காரணங்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் இந்திய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கிக் குவிப்பதே பங்கு சந்தை உயர்வுக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி 2017-ம் ஆண்டு 6.7 சதவீதமாக இருந்த நிலையில் 7.4 சதவீதமாக 2018-ம் ஆண்டு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications