வாரத்தின் கடைசி நாள் வர்த்தகம் பெரிய அளவிலான சரிவுகள் ஏதுமில்லாமல் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க முதலீட்டாளர்கள் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஏற்பட்ட அதிகப்படியான வர்த்தகச் சரிவால் இன்று மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்கச் சந்தையின் சரிவிற்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வட்டி உயர்வு
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தற்போது சிறப்பாக இருக்கும் நிலையில் அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தைக் கூடிய விரைவில் உயர்த்தும் என்பதாற்கான சமிக்கைகள் அதிகமாக வந்துக்கொண்டு இருக்கிறது.
பத்திர முதலீடு
அப்படி வட்டியை உயர்த்தினால் அமெரிக்காவின் முக்கிய முதலீட்டுத் தளமாக இருக்கும் பத்திர முதலீட்டின் மீதான வட்டி வருமானம் குறையும். இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகமாகும்.
அமெரிக்கப் பத்திர முதலீடு மீதான வருமானம் தற்போது கடந்த 10 வருட உயர்வை வெறும் 4 வருடத்தில் அடைந்துள்ளது.
டாவ் ஜோன்ஸ்
தற்போது வட்டியை உயர்த்தினால் இதன் மீதான முதலீட்டில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து சந்தையில் இருக்கும் முதலீட்டை குறைத்து வருகின்றனர்.
இதனால் நேற்றைய டாவ் ஜோன்ஸ் குறியீடு சுமார் 1,032.89 புள்ளிகள் வரையில் குறைந்தது.
சர்வதேச சந்தை
இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சீனா, ஹாங்காங், ஜப்பான், ஆஸ்திரேலியா, தைவான் ஆகிய அனைத்து முக்கிய ஆசிய சந்தைகளும் இன்று சரிவை சந்தித்தது. இதில் அதிகப்படியாகச் சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகள் 4.11 சதவீதம், 3.33 சதவீதம் வரையில் சரிவை சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தை
அமெரிக்கச் சந்தையின் தாக்கத்தில் இந்தியாவும் அதிகளவில் பாதிக்கப்பட்டது, இன்றைய வர்த்தகத் துவக்கத்திலேயே சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை சந்தித்து
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
10.45 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 494.20 புள்ளிகள் சரிந்து 33,919.12 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 157.50 புள்ளிகள் சரிந்து 10,419.35 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications