இந்திய பங்குசந்தை மூன்று நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் இன்று அதிரடியாக உயர்வைக் கண்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்புக்கான எதிர்பார்ப்புகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்ற அளவில் ஏற்றபட்ட மாற்றும் இன்றைய உயர்வுக்கு முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளது.
பிஎஸ்இ-யில் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகள் உயர்ந்து இன்றைய நாளின் உச்ச அளவான 85,582.40 புள்ளிகளை அடைந்ததுள்ளது. செப்டம்பர் 27, 2024 அன்று தொட்ட 85,978 உச்சத்தில் இருந்து வெறும் 400 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளது. இந்த அதிரடியான உயர்வு மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தைமதிப்பை 4.4 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 474.34 லட்சம் கோடி ரூபாயாக்கியுள்ளது.

இதேபோல் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 26,195.40 அளவை அடைந்தது. செப்டம்பர் 2024-ல் தொட்ட 26,277 என்ற உச்சத்தில் இருந்து வெறும் 100 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளது. இது அடுத்த சில நாட்களில் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய உயர்வு முதலீட்டு சந்தையில் உள்ள முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சிறு முதலீடுகளைப் பற்றி கவலைப்படாமல் இருக்கலாம்.
அமெரிக்க வட்டி குறைப்பு எதிர்பார்ப்புகள்
இன்றைய உயர்வுக்கு முதல் காரணம் அமெரிக்க பெடரல் ரிசர்வின் டிசம்பர் 2025 கொள்கை கூட்டத்தில் வட்டி குறைப்பு நடக்கும் என்ற நம்பிக்கை தான். அமெரிக்காவின் பொருளாதார தரவுகள் மந்தமாக இருப்பதால் வட்டி குறைப்புக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிஎம்இ க்ரூப்பின் ஃபெட்வாட்ச் தரவுகளின்படி, 85 சதவீத முதலீட்டாளர்கள் ஜெரோம் பவுல் தலைமையிலான ஃபெட் வட்டி குறைக்கும் என்று நம்புகின்றனர். வட்டி குறைப்பு மட்டும் கணிக்கப்பட்ட நடந்தால் முதலீட்டு சந்தையில் மிகப்பெரிய தொகை பத்திர சந்தையில் இருந்து வரும். இந்த பணம் பங்குச்சந்தையிலும், தங்கத்திலும் முதலீடுகளை குவிய வழிவகுக்கும்.
அமெரிக்க வட்டி குறைப்பு கணிப்பு சர்வதேச சந்தைக்கு பெரும் பலமாக மாறியுள்ளது, ஆசிய பங்கு சந்தைகள் அனைத்தும் இன்று உயர்வுடன் துவங்கியதால் இந்திய சந்தைக்கும் இது சாதகமாக அமைந்துள்ளது. அமெரிக்கா பங்குச்சந்தையும் நேற்று உயர்வுடன் முடிந்தது. ஜப்பானின் நிக்கெய் 1.8 சதவீதம் உயர்ந்தது, ஆசிய-பசிஃபிக் பங்குகளின் எம்எஸ்சிஐ குறியீடு 1 சதவீதம் மேலேறியது. அமெரிக்க பங்கு ஃப்யூச்சர்ஸ் 0.2 சதவீதம் உயர்ந்தன.


Click it and Unblock the Notifications