பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தின் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 2வது கட்டத் தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடக்க உள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து வெளியான கணிப்புகளில் பிஜேபி கட்சிக்கு பெரிய அளவிலான வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
மும்பை பங்குச்சந்தை
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் காலை முதல் முதலீட்டு அளவுகள் கணிசமாக உயர்ந்தது, ஆனால் FRDI மசோதா மற்றும் 28 நிறுவனங்களின் வங்கி திவாலாக அறிவிக்கும் பணிகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து லாபகரமான சூழ்நிலையிலேயே வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தை
ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் மீண்டும் உயர்ந்த மும்பை பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் 200 புள்ளிகளுக்கும் அதிகமான உயர்வைக் கண்டது.
சென்செக்ஸ்
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 205.49 புள்ளிகள் உயர்ந்து 33,455.79 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் வர்த்தக முடிவில் உயர்வான நிலையில் 56.00 புள்ளிகள் உயர்ந்து 10,322.25 புள்ளிகள் என்ற உயர்வான நிலையை அடைந்தது.


Click it and Unblock the Notifications